Tamil Flash News
சென்னை வானிலை மையம் கொடுத்த தகவல் – சென்னை வாசிகள் அதிர்ச்சி!
சென்னையில் மழை பெய்ய வாய்ப்பில்லை என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் முழுவதும் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இது மழை பெரும் பகுதியில் வசிக்கும் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பொழியும் என வானிலை மையம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், தேனி, திண்டுக்கல், நீலகிரி, விருதுநகர், நெல்லை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும், ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
ஆனால், இந்த பட்டியலில் சென்னை இல்லை. ஏற்கனவெ அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே சென்னைக்கு மழை என வெதர்மேன் கிண்டலாக கூறியிருந்தார். அது நடந்து விட்டது. எனவே, சென்னையில் வெயில் கொளுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.