Tamil Flash News
தமிழகத்தில் இன்று கனமழை – வானிலை மையம் அறிவிப்பு!
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் அக்னி வெயில் கொளுத்தி வரும் வேளையில் வெப்பச்சலனம் காரணமாக அவ்வப்போது சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், சேலம், தர்மபுரி, ஈரோடு, வேலூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தூத்துக்குடி, கோவை மற்றும் பொள்ளாச்சி சுற்றுவட்டாரங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த 4ம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் வருகிற 29ம் தேதி வரை நீடிக்கிறது. சில இடங்களில் 110 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரிக்கிறது. இந்நிலையில், வானிலை மையத்தின் அறிவிப்பு பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.