நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2018ல் வெளியான திரைப்படம் மாரி 2. இப்படத்தை பாலாஜி மோகன் இயக்கி இருந்தார். இப்படத்தில் தனுஷ், சாய் பல்லவி நடித்திருந்தனர்.
சாய் பல்லவி , தனுஷ் நடித்த ரவுடி பேபி பாடல் புகழ்பெற்றது. இந்த பாடலை இதுவரை இல்லாத அளவு 120 கோடி பேர் பார்த்து ரசித்துள்ளனர். பிரபுதேவா நடனம் அமைத்திருந்தார். இந்த பாடலுக்கு யுவன் இசையமைத்திருந்தார்.
இந்த பாடல் யார் கண்பட்டதோ தெரியவில்லை . இந்த பாடல் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த அதிகாரப்பூர்வ நிறுவனமான இப்படம் தயாரித்த வுண்டர் பார் யூ டியூப் சேனல் முடக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று சேனலை மீட்டெடுத்து விட்டதாக வுண்டர் பார் நிறுவனம் அறிவித்துள்ளது.