விசு நினைவில் எஸ்.வி சேகர்

48

அந்தக்காலங்களில் விசுவின் பெரும்பாலான படங்களில் நடித்தவர் எஸ்.வி சேகர். மணல் கயிறு, சிகாமணி ரமாமணி, திருமதி ஒரு வெகுமதி உள்ளிட்ட பல படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இப்படங்களை விசுவே இயக்கியுள்ளார். மேலும் மிஸ்டர் பாரத் உள்ளிட்ட விசு இயக்காத படங்களிலும் எஸ்.வி சேகர் நடித்துள்ளார்.

விசு இயக்கிய மணல் கயிறு படத்தில் எட்டுக்கட்டளைகள் போட்டு திருமணம் முடிக்கும் அப்பாவி வேடத்தில் எஸ்.வி சேகர் நடித்திருப்பார்.

கடந்த வருடம் கொரோனா லாக் டவுன் சமயத்தில் இயக்குனரும் நடிகருமான விசு மறைந்தார்.

இதனால் துயரம் அடைந்த எஸ்.வி சேகர் விசுவுடன் பணியாற்றிய தன் பழைய நினைவுகளை மறக்க முடியாமல் என்றும் என் நினைவில் நீ. ஓராண்டு ஓடிவிட்டது. உன் வசனங்கள் சாகாவரம் பெற்றது. சினிமா உள்ளவரை நீயும் வாழ்ந்து குடும்ப நாயகனாக வழிகாட்டிக்கொண்டிருப்பாய் நண்பா. என விசுவை நினைவு கூர்ந்துள்ளார்.

பாருங்க:  துர்கா ஸ்டாலின் குறித்து எஸ்.வி சேகர்
Previous articleசூப்பர் ஸ்டாருடன் சரவணா ஸ்டோர் அதிபர்
Next articleமொட்டை கெட் அப்பில் பல கேரக்டர்- சத்யராஜ் பாராட்டிய ஓவியர்