சிம்புதான் என் பெஸ்ட் பிரண்ட்டு! நடிகரின் பரபரப்பு டிவீட்!

சிம்புதான் என் பெஸ்ட் பிரண்ட்டு! நடிகரின் பரபரப்பு டிவீட்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் விஷ்ணு விஷால் சினிமா துறையில் தனது முதல் நண்பர் சிம்புதான் என தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தனக்கென பெரிய ரசிகர் பட்டாளம் இல்லாவிட்டாலும் தொடர்ந்து கமர்ஷியலாக வெற்றி பெறும் படங்களாகக் கொடுத்து தனக்கென ஒரு சந்தையை உருவாக்கியுள்ளவர் விஷ்ணு விஷால். சமீபத்தில் அவர் நடித்து வெளியான ராட்சசன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதுடன் அனைத்து மொழிகளிலும் ரீமேக்கும் செய்யப்பட்டது.

சமீபத்தில் தனது மனைவியை விவாகரத்து செய்த விஷ்ணு விஷால் விளையாட்டு வீராங்கனை ஜூவாலா கட்டாலாவுடன் காதலில் இருப்பதால் சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளார். இந்நிலையில் தற்போது ‘என் முதல் படத்துக்கு பிறகு , சினிமா துறையில் சிம்பு தான் என் முதல் நண்பர். நாங்கள் இருவரும் மனதளவில் ஒருவருக்கொருவர் நல்ல மரியாதையுடன் இருக்கிறோம். அவர் மற்ற நடிகர்களை விட மிகவும் வெளிப்படையானவர். ராட்சசன் படத்தின் போது பல்வேறு விஷயங்களை என்னுடன் பகிர்ந்துள்ளார். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் இது’ என ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.