விஷால் நடித்து வரும் திரைப்படம் லத்தி. இப்படத்தை விஷாலின் நண்பர்களான ரமணா, நந்தா இருவரும் இணைந்து ராணா புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தை ஆரம்பித்து லத்தி படத்தை தயாரித்துள்ளனர். இவர்கள் சன் டிவியில் வெளிவந்த நாம் இருவர் என்ற புகழ்பெற்ற நிகழ்ச்சியை தயாரித்தவர்கள் ஆவர்.
விஷால் கடைசியாக நடித்து வெளிவந்த திரைப்படம் வீரமே வாகை சூடும் இந்த படத்திற்கு அடுத்தபடியாக லத்தி என்ற திரைப்படம் விஷாலின் 32 வது படமாக இந்த படமாக உருவாகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இப்படம் வரும் ஆகஸ்ட் 22 அன்று வெளியாகும் என நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.
இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடிக்கிறார்.
வினோத்குமார் என்பவர் இப்படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார். அவரே கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். சாம் CS இப்படத்திற்கு இசையமைக்கிறார்,