நடிகர் விஷால் ஆனந்த் ஷங்கர் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார் .அவன் இவன் படத்துக்கு பிறகு சில வருட இடைவேளைக்கு பின்பு இப்படத்தில் விஷாலுடன் ஆர்யாவும் நடிக்கிறார். விஷாலுக்கு 30வது படமாகவும் ஆர்யாவுக்கு 32வது படமாகவும் இப்படம் அமைய உள்ளது.
இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றுள்ளது. ஹைதராபாத் சென்றுள்ள விஷால் அவன் இவன் படத்தில் நடித்தபோது கண்களை வித்தியாசமாக வைத்து நடித்ததால் தீராத தலைவலி ஏற்பட்டதாக சில மீடியாக்கள் செய்தி வெளியிட்டு இருந்தன.
விஷால் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்தால் அப்படி தெரியவில்லை. முதல் ஷெட்யூல் முடிந்து விட்டதாக படக்குழுவினருடன் புகைப்படம் வெளியிட்டுள்ளார் விஷால் இப்படத்தில் காமெடி வேடத்தில் கருணாகரன் நடிக்கிறார்.
That was super quick 👏👏👏👌💪😘 https://t.co/XUi5kzj1H5
— Arya (@arya_offl) November 6, 2020
That was super quick 👏👏👏👌💪😘 https://t.co/XUi5kzj1H5
— Arya (@arya_offl) November 6, 2020