Latest News
விஸ்வரூபம் எடுக்கும் விருதுநகர் பாலியல் விவகாரம்
விருதுநகரில் திமுக நிர்வாகியும் அவரது சில நண்பர்களும் சேர்ந்து ஒரு பெண்ணை பல முறை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இந்த விவகாரம் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த பாஜகவின் அண்ணாமலை குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இதே போல் எதிர்க்கட்சித்தலைவரான முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின், எம்.பி கனிமொழி ஆகியோரும் இச்சம்பவத்துக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்ததோடு மட்டுமல்லாமல் அவர்களை திமுகவில் இருந்தும் நீக்கியுள்ளார்.
