கட்சிக்காரர்கள் பிடியில் இருந்து காவல்துறையை மீட்பாரா முதல்வர்- அண்ணாமலை கேள்வி

கட்சிக்காரர்கள் பிடியில் இருந்து காவல்துறையை மீட்பாரா முதல்வர்- அண்ணாமலை கேள்வி

விருதுநகரில் 22 வயது இளம் மாணவியை ஆளும் கட்சியை சேர்ந்த 8 பேர் சேர்ந்து மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்த விசயம் தற்போது பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

இந்த விசயம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை கூறியுள்ளதாவது,

விருதுநகரில், ஒரு கும்பல் வீடியோ மூலம் பிளாக்மெயில் செய்து, 22 வயது பெண்ணை கூட்டாக பலாத்காரம் செய்த அவலச் செய்தியறிந்து அதிர்ச்சியும் சோகமும் அடைந்தேன். இதைவிட கூடுதல் அதிர்ச்சியளிக்கும் விஷயம் – இந்த வெட்கக்கேடான செயலுக்கு மூளையாக இருந்தது ஒரு உள்ளூர் திமுக பிரமுகர்

இந்தக் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவது அவசியமே, ஆனால், தற்போது

அரசில் ஒட்டுமொத்த காவல் துறையை மேம்படுத்துவதே, மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும்.

தனது கட்சிக்காரர்களின் பிடியிலிருந்து உள்ளூர் காவல்துறையை சுதந்திரமாக செயல்பட முதல்வர் அனுமதிப்பாரா என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.