Connect with us

அதிகரிக்கும் ஆளும் கட்சியினரின் குற்றச்செயல்கள்- அண்ணாமலை கண்டனம்

Latest News

அதிகரிக்கும் ஆளும் கட்சியினரின் குற்றச்செயல்கள்- அண்ணாமலை கண்டனம்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே குற்றச்செயல்கள் மிகவும் அதிகரித்து வருகின்றன. குற்றச்செயல்களுக்கு எதிராக திமுக அரசு கடுமையான நடவடிக்கை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது.

இந்த நிலையில் விருது நகர் மாவட்டத்தில் ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக திமுக ஊராட்சி ஒன்றியத்தலைவர் ஒருவர் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டு இருக்கிறது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் விருது நகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இன்று தீக்குளிக்க முயன்றார்.

இது குறித்து அண்ணாமலை கூறியதாவது,

தமிழகத்தில் தினந்தோறும் திமுகவினரின் குற்றச்செயல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தீ குளித்தால் தான் நீதி கிடைக்குமா? கட்சியில் உள்ளவர்கள் செய்யும் குற்றங்களைக் கண்டுகொள்ளாமல், சட்டம் ஒழுங்கு தனது நேரடி கட்டுப்பாட்டில்…

இருக்கும் என்று முதல்வர் முழங்குவதால் எந்தவித பயனும் இல்லை பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது குடும்பத்தாருக்கு நீதி கிடைக்க இந்த அரசு உடனடியாக வழிவகை செய்யவேண்டும். கயவர்களைக் கைது செய்யாவிட்டால் விருதுநகரில் மீண்டும் ஒரு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க பிஜேபி தயங்காது என அண்ணாமலை கூறியுள்ளார்.

 

பாருங்க:  மது விருந்து நிகழ்ச்சியில் நடனமாடியவர் மயங்கி விழுந்து பலி

More in Latest News

To Top