படத்தை வெற்றி பெற செய்த இயக்குனருக்கு தயாரிப்பாளர் கார் பரிசு

படத்தை வெற்றி பெற செய்த இயக்குனருக்கு தயாரிப்பாளர் கார் பரிசு

கடந்த 8 மாதத்திற்கும் மேலாக கொரோனாவால் மக்கள் போராடி கொண்டிருப்பதால் தியேட்டர்கள் திறக்கப்படவில்லை இதனால் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் பெரும் நஷ்டத்தில் உள்ளனர். தியேட்டர் உரிமையாளர்களும் நஷ்டத்தில் இருக்க தற்போது ஓடிடி தளத்தினருக்குத்தான் ஜாக்பாட் அடித்துள்ளது எனலாம்.

அப்படியாக ஜீ 5 ஒடிடியில் சில நாட்களுக்கு முன் வெளியான படம் க/பெ ரணசிங்கம் ராமநாதபுரம் மாவட்டத்தை மையமாக கொண்ட இக்கதை இறந்து போன தன் கணவரின் உடலை வெளிநாட்டில் இருந்து மீட்டுக்கொண்டு வர போராடும் பெண்ணின் கதையாகும்.

இந்த கதையை அழகாக சொன்னதால் பலருக்கும் இக்கதை பிடித்திருந்தது. ஓடிடியில் வந்து ஓரளவு லாபத்தையும் பெயரையும் கொடுத்த படம் இது எனலாம்.

இந்த படத்தை கே.ஜே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.நல்ல ஒரு படத்தை இயக்கியதற்காக கேஜேஆர் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ரணசிங்கம் படத்தின் இயக்குனருக்கு ஒரு கார் பரிசளித்துள்ளார்.