Entertainment
செம வைரலில் விருதுநகர் மாவட்ட கலெக்டர்
தற்போது அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.குறிப்பாக தென்மாவட்டங்களில் கடும் மழை பெய்து வரும் நிலையில் ஒவ்வொரு மாவட்ட கலெக்டரும் சூழ்நிலைக்கேற்ப விடுமுறை விட்டு வருகின்றனர்.
அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் விடுமுறை அளிக்கப்படாத நிலையில் மாணவன் ஒருவன் விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டியை டேக் செய்து டுவிட் செய்து இருந்தான்.
சார் விருதுநகர் மாவட்டத்திலும் மழை பெய்யுது சார் என கூறி இருந்த நிலையில் அந்த மாணவனின் டுவிட்டுக்கு பதில் அளித்துள்ள கலெக்டர் விடுமுறைக்காக உங்கள் தொடர்ச்சியான பிரார்த்தனைகளுக்கு நன்றி நம்முடைய மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது.
விடுமுறையை பயன்படுத்தி வீட்டுப்பாடங்களை செய்யுங்கள் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
