விக்ரம் பிரபு மகனுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய விராட் கோலி – வைரல் வீடியோ

விக்ரம் பிரபு மகனுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய விராட் கோலி – வைரல் வீடியோ

கும்கி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் விக்ரம் பிரபு. இப்படம் மாபெரும் வெற்றியடைய அவர் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தற்போது மணிரத்னத்தின் உதவியாளர் தனசேகரன் இயக்கத்தில் வானம் கொட்டட்டும் திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில், விக்ரம் பிரபுவின் மகன் விராட் சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி வாழ்த்து தெரிவித்தார்.

இந்த வீடியோவை விக்ரம் பிரபு தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.