Entertainment
வைரலாகும் ரஜினி பட போஸ்டர் பற்றிய செய்தி
ரஜினி கமல் பிஸியாக இருந்த 80கள், 90கள் காலத்தில் ரஜினி படம் கமல் படம் ரிலீஸ் ஆனால்தான் அவர்களின் ரசிகர்களுக்கு பிடிக்கும். அப்படி வரவில்லை என்றால் அந்த தீபாவளியையே அவர்கள் புறக்கணிப்பார்கள். அப்படியாக 90ம் ஆண்டு தீபாவளிக்கு ரஜினி நடித்த படம் எதுவும் வரவில்லையாம்.
அதனால் அந்த தீபாவளியை துக்க நாளாக அனுசரித்து ரசிகர்கள் அடித்த வால் போஸ்டர் ஒன்று வைரலாகிறது. இந்த போஸ்டர் மதுரை திருப்பரங்குன்றத்தில் அடிக்கப்பட்டுள்ளது.
91ம் ஆண்டு ரஜினி நடித்த தளபதி படம் வெளியானது அப்போது பேசிய தளபதி பட தயாரிப்பாளர் ஜிவி, இனி வரும் காலங்களில் தீபாவளி மட்டுமல்ல, ஒவ்வொரு பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு தினம் அன்றும் ரஜினி படம் வெளியாகும் என்று பேசினார்.
1990 தீபாவளிக்கு ரஜினி படம் வரலன்னு.. அது ஒரு துக்க தீபாவளின்னு போஸ்டர் அடிச்சு ஒட்டிருக்காங்க ரசிகர்கள் அப்போ ..
பண்டிகை நாளில் நம் உறவினர்களை சந்திப்பது போல ரஜினியையும் தியேட்டரிலாவது பார்த்திடனும்.. அப்போ தான் அது முழுமை அடையும்#Rajinikanth #Annaatthe pic.twitter.com/aBPYO25P8Q
— vaishali (@vaisu_tweets) December 4, 2021
