வைரல் ஆகும் உயரதிகாரி மகள்- இன்ஸ்பெக்டர் தந்தை புகைப்படம்

76

ஆந்திர மாநில காவல்துறையில் ஷியாம் சுந்தர் என்பவர் பணிபுரிகிறார். இவர் காவல்துறையில் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வரும் நிலையில் இவரது மகளான ஜெஸ்ஸி பிரசாந்தி என்பவர் 2018ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்று குண்டூர் நகர காவல்துறை கூடுதல் ஆணையர் பொறுப்பை வகித்து வருகிறார்.

இவர் தந்தையை விட இவர் உயரதிகாரி என்பதால் திருப்பதியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த இவருக்கு அவரது தந்தை ஷ்யாம் சுந்தர் சல்யூட் அடித்து மரியாதை செய்துள்ளார்.

இந்த புகைப்படம்தான் இன்று சமூக வலைதளங்களையும் செய்தி சேனல்களையும் கலக்கி வருகிறது.

 

பாருங்க:  மனித மாமிசத்துடன் ஓப்பனிங் பவுடர் பட திகில் ட்ரெய்லர்