விநாயகர் சதுர்த்தி விழா முடிந்து விநாயகர் ஊர்லவலம் நடத்துவதற்கு எப்போதும் தடை இருக்காது. ஆனால் தற்போது தடை நிலவுகிறது. கொரோனா பரவும் காரணத்தால் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு அரசு தடை விதித்துள்ளது.
இந்நிலையில் சட்டப்பேரவையில் பேசிய பாஜக எம்.எல்.ஏ எம்.ஆர் காந்தி விநாயகர் ஊர்வலத்தை அனுமதிக்க கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதிலளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மத்திய அரசு அறிவுறுத்தல்படியே பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய அரசின் உள்துறை செயலாளர் அஜய் பல்லா இது குறித்து வலியுறுத்தியுள்ளதாக அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.