cinema news
விமானம் இயக்கும் வினய்
தமிழில் உன்னாலே உன்னாலே படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் வினய். முதல் படத்திலேயே சார்மிங்கான ஹீரோவாக இவரை ரசிகர் ரசிகைகள் ஏற்றனர்.
அடுத்தடுத்து ஜெயங்கொண்டான் உள்ளிட்ட படங்களில் நடித்தார். பிறகு சில வருடங்கள் எந்த படத்திலும் நடிக்காமல் மார்க்கெட் இல்லாமல் இருந்தார்.
சமீப காலங்களாக சில படங்களில் வில்லனாகவும் நடித்து வருகிறார். துப்பறிவாளன், எதற்கும் துணிந்தவன் என சில படங்களில் வித்தியாச வில்லன் நடிப்பையும் வெரைட்டியான நடிப்பையும் வெளிப்படுத்தி வருகிறார்.
இவர் பிரபலமான நடிகையான விமலா ராமனை காதலித்து வருவதாகவும் அண்மைக்காலமாக செய்திகள் வந்துக்கொண்டிருக்கிறது. இது ஒரு புறமிருக்க வினய் விமானம் ஓட்டும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
முறையான பயிற்சி பெற்று வினய் விமானம் ஓட்டும் காட்சிகள் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.