Entertainment
வில்லேஜ் குக்கிங் சேனலுக்கு ராகுல் காந்தி வாழ்த்து
வில்லேஜ் குக்கிங் சேனல் என்ற யூ டியூப் சேனல் கடந்த 2018ம் ஆண்டு புதுக்கோட்டையை சேர்ந்தவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. முற்றிலும் திறந்தவெளியில் வித்தியாசமான முறையில் இவர்களால் சமையல் செய்யப்பட்டது.
கடந்த தேர்தலுக்கு தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்ய வந்த ராகுல் காந்தி இந்த யூ ட்யூப் குழுவினருடன் சேர்ந்து சமையல் செய்து, காளான் பிரியாணி செய்து மகிழ்ந்தார்.
இந்த குழுவினர் சமீபத்தில் கொரோனா நிதியாக 10 லட்சம் ரூபாயை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கினர்.
இந்த குழு ஆரம்பித்து சில வருடங்களுக்குள் 1 கோடி சப்ஸ்க்ரைபர்ஸை பெற்றுள்ளது. தென்னிந்தியாவில் எந்த ஒரு யூ டியூப் சேனலும் இவ்வளவு சப்ஸ்க்ரைபரை பெற்றதில்லை.
இதுதொடர்பாக பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, “வில்லேஜ் குக்கிங் சேனல் அடைந்துள்ள உயரத்திற்கு தன்னுடைய இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். கொரோனா நிவாரணத்துக்கு பங்களிப்பு அளித்ததற்கு வாழ்த்துகள் என்றும் உங்களை மீண்டும் சந்திக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.