Published
9 months agoon
இணைய யூ டியூப் வீடியோக்களில் மிகவும் புகழ்பெற்றது சமையல் வீடியோக்கள்தான், மற்ற வீடியோக்களை விட இந்த வீடியோக்களுக்கு யூ டியூபில் தனி மவுசு உள்ளது.
இந்த யூ டியூப் சேனலில் வில்லேஜ் குக்கிங் என்ற சேனல் புகழ்பெற்றது. கடந்த 2017ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த சேனல் மிக வேகமாக புகழ்பெற்று தமிழ் யூ டியூப் சேனல்களில் 10 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை வேகமாக பெற்று முன்னணியில் இருந்தது.
தமிழ்நாட்டுக்கு வந்திருந்த காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, இந்த யூ டியூப் சேனல்காரர்களை சந்தித்து அவர்கள் சொல்லியபடி காளான் பிரியாணி செய்தார் இந்த வீடியோவும் இணையத்தில் புகழ்பெற்றது ஆகும்.
இந்த சூழ்நிலையில் கமல் நடித்து சமீபத்தில் வெளிவந்த விக்ரம் படத்தில் இந்த யூடியூப் குழுவினர் ஒரு காட்சியில் நடித்துள்ளனர். இதற்கு நன்றி தெரிவித்து அவர்கள் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர்.
First Time in Our Life! Thank you, @Dir_Lokesh Anna, @ikamalhaasan sir, @VijaySethuOffl Anna, @RKFI, and our lovable subscribers! pic.twitter.com/JAQTmswdFD
— Village Cooking Channel (@Team_VCC) June 5, 2022