Connect with us

விக்ரம் டீஸர் உருவான விதம் குறித்து லோகேஷ் கனகராஜ்

Latest News

விக்ரம் டீஸர் உருவான விதம் குறித்து லோகேஷ் கனகராஜ்

கமல்  1985ல் நடித்து வெளிவந்த விக்ரம் படம் போல் மீண்டும் அதே பெயரில் ஒரு படம் நடிக்கிறார். நேற்று கமலின் பிறந்த நாளையொட்டி இப்படத்தின் டீஸருடன் படப்பெயர் அறிவிக்கப்பட்டது.

லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தின் டீஸர் வெளியீடு பற்றி இயக்குனரே சொன்னது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த டீஸர் வெளியீடு நடந்தது அதில் பேசிய லோகேஷ்,

படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பை எப்படி வெளியிடலாம் என்பது குறித்து யோசித்தோம் வெறும் போஸ்டராக இல்லாமல் ஆக்கபூர்வமாக வெளியிடலாம் என யோசித்ததில் டீஸராகவே வெளியிடலாம் என யோசித்தோம் பிறகு இதற்காக ஒரு தனி டீஸரே ஷூட் செய்யலாம் என்று கமல் சாரிடம் கூறியதற்கு தயங்காமல் அவரே ஓக்கே சொன்னார்.

கரோனா அச்சுறுத்தலால் அப்போது மிகவும் தயக்கத்துடனே சொன்னேன். உடனே மகிழ்ச்சியடைந்து தன்னுடைய மற்ற பணிகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு வந்து நடித்துக் கொடுத்தார். அதுமட்டுமின்றி அவரது பிறந்த நாளுக்கு அவருக்கு என்ன அன்பளிப்பு கொடுப்பது என்று எனக்குத் தெரியவில்லை. இதைவிடச் சிறந்த அன்பளிப்பையும் எங்களால் கொடுத்திருக்க முடியுமா என்று எங்களுக்குத் தெரியவில்லை” என லோகேஷ் கூறியுள்ளார்.

பாருங்க:  முன்னாள் மாணவர் சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் விபத்தில் பலி

More in Latest News

To Top