Published
10 months agoon
ஒரு முன்னணி நடிகர் படம் ரிலீஸானாலே தியேட்டரில் கட் அவுட்கள் , பேனர்கள் அதிகம் இருக்கும். அதைவிட ரசிகர்களின் ஆட்டம் சொல்ல முடியாத வகையில் இருக்கும். ரசிகர்களை கட்டுப்படுத்த முடியாது.
இந்த சூழ்நிலையில் நாளை ரிலீஸ் ஆக இருக்கும் விக்ரம் படத்தில் கமல்ஹாசனுக்கே அதிக கூட்டம் கட்டுப்படுத்த முடியாத நிலையில் வரும்போது, விஜய் சேதுபதி, பகத் பாஸில் எல்லாம் நடித்திருப்பதால் அதிகமான கூட்டத்தை எதிர்பார்க்கலாம்.
இதில் முக்கியமான வேடத்தில் சூர்யா வேறு நடிப்பதால் அவரின் ரசிகர்களும் அதிக அளவு வரக்கூடும்.ஒரு படம் ரிலீஸ் ஆனால் சூர்யாவின் ரசிகர்கள் எவ்வளவு பேர் வருவார்கள் என அனைவருக்கும் தெரியும்.
ஆக கமல் ரசிகர்கள், விஜய் சேதுபதி ரசிகர்கள், சூர்யா ரசிகர்கள் என தியேட்டரில் அனைவரும் குவியப்போகிறார்கள். இந்த படம் நாளை ரிலீஸாக இருக்கும் நிலையில் இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு, சூர்யா மற்றும் கமல் ரசிகர்களுக்கு அதிகம் உள்ளது.
அதுபோல இப்படத்துக்கு முதல் மூன்று நாட்களாவது வரலாறு காணாத கூட்டம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.