கமல் தற்போது இந்தியன் 2 மற்றும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படங்களில் நடித்து வருகிறார். இதில் இந்தியன் 2 படம் பஞ்சாயத்துக்கு மேல் பஞ்சாயத்தாக தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறது.
இயக்குனர் ஷங்கருக்கும் தயாரிப்பாளருக்கும் ஏற்பட்ட பிரச்சினையால் படப்பிடிப்பு நடக்காமல் அப்படியே நிற்கிறது.
இந்த நிலையில் லாக் டவுன் முடிந்து தளர்வுகள் ஏற்பட்டால் உடனடியாக விக்ரம் படத்தை ஆரம்பித்து நடித்து முடித்து விடுவது என்ற வேகத்தில் கமல் இருக்கிறாராம்.
ஆகவே இப்போதைக்கு இந்தியன் 2 படம் இல்லை என்று இதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.

