கடந்த 6 மாதங்களுக்கு முன் டெல்டா வைரஸின் வேகம் அதிகமாக இருந்த காலத்தில் கொரோனா தொற்றால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டனர் அப்போது சினிமா நடிகர் நடிகைகளும் பாதிக்கப்பட்டனர்.
கடந்த சில நாட்களாக கொரோனா அபாயம் நீங்கி மக்கள் இயல்பு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன் நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று பரவிய நிலையில் அவர் சிகிச்சையில் இருந்து மீண்டுள்ளார்,
நேற்றைய தினம் நடிகர் அர்ஜூனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று நடிகர் விக்ரமுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் வீட்டு தனிமையில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டதாக சொல்லப்படுகிறது.