கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1986ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் விக்ரம். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல ரீச் ஆனது ஆனால் போதிய வெற்றியை பெறவில்லை.
இந்த நிலையில் நீண்ட வருடத்துக்கு பிறகு கமல் அதே பெயரில் விக்ரம் படம் நடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.முதல் படத்துக்கும் இதற்கும் சம்பந்தமில்லை இந்த படம் வரும் ஜூன் 3ல் தியேட்டரில் வெளியாகிறது.
கமல்ஹாசன் நடிப்பில் நீண்ட இடைவேளைக்கு பிறகு வெளியாகும் படம் என்பதால் ரசிகர்களிடையே ஆர்வம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 என்ன ஆனது, விக்ரம் 3 வருமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு , இந்தியன் 2வை அவங்கதான் முடிவு பண்ணனும், ஆனால் விக்ரம் 3க்கு நான் ரெடி டைரக்டர் லோகேஷ் கனகராஜ்தான் அதை அவர்கிட்ட கேட்காமலேயே நான் முடிவு பண்ணிட்டேன் என கமல் கூறியுள்ளார்.