மகனா நினைச்சு என்ன உதவினாலும் கேளுங்க – சுபஸ்ரீ பெற்றோரிடம் உருகிய விஜயகாந்த் மகன்

276

பேனர் விழுந்து மரணம் அடைந்த இளம்பெண் சுபஸ்ரீயின் பெற்றோரை தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

சென்னை பள்ளிக்கரணையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த ஒரு பேனர் ஒன்று அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சுபஸ்ரீ என்கிற பெண் மீது விழுந்தது. இதில், அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறி மரணமடைந்தார். இந்த விவகாரம் தமிழகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

kamalhaasan

இதுவரை கமல்ஹாசன், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் சுபஸ்ரீயின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருந்த நிலையில், நேற்று மாலை தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகன் சுபஸ்ரீயின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். அப்போது, நான் வந்ததில் அரசியல் எதுவுமில்லை. சுபஸ்ரீயின் மரணம் என்னை மிகவும் பாதித்தது. என்னை உங்கள் மகனாக நினைத்து என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் என அவர்களிடம் கூறினார்.

பாருங்க:  நடிகர் விஜய் குடும்பத்தில் வெளிநாட்டில் மாட்டிக்கொண்ட நபர்! சோகத்தில் குடும்பம்!
Previous articleஷெரினை காப்பாற்ற தர்ஷன் செய்யும் வேலைய பாருங்க – பிக்பாஸ் வீடியோ
Next articleசுபஸ்ரீ பற்றி விஜய் பேசியதை கட் செய்த சன் டிவி – பின்னணி என்ன?