cinema news
விஜயகாந்த் ஷூட் என்றால் சாப்பாடு தடபுடல்தான் – அம்மா கிரியேசன்ஸ் சிவா
விஜயகாந்த் என்றாலே சாப்பாடுக்கு பெயர் போனவர் என்று பரவலாக சொல்லப்படுகிறது. எப்போதும் அன்னதானத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டவர்.
உதவி இயக்குனர்கள், சினிமாவில் வாய்ப்பு தேடி வருபவர்களுக்கு விஜயகாந்த் ஆபிசில் எப்போதுமே சாப்பாடு நடக்கும் என்றும் வறுமையில் இருந்த பல உதவி இயக்குனர்கள் அதை சாப்பிட்டு வாழ்ந்திருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
சமீபத்தில் தயாரிப்பாளர் அம்மா கிரியேசன்ஸ் சிவா ஒரு தனியார் சேனலின் பேட்டியில் கூறியிருப்பதாவது,
விஜயகாந்த் நடித்த உழவன் மகன் ஷூட்டிங் ஒரு பக்கம் நடக்குது, ஒரு பக்கம் நாயகன் ஷூட்டிங் நடக்குது. நாயகன் படத்துல மதிய சாப்பாடு புளியோதரை தயிர்சாதம் இதுதான் சாப்பாடா நடக்குது.
இவரோட ஷூட்டிங்ல அசைவ வகைகள் எல்லாமே தடபுடல் விருந்தா சாப்பாடு நடக்குது. நல்லா எல்லாரும் சாப்பிடணும்னு நினைப்பார். அதற்காக தனது சம்பளத்துல கூட காசு போகுதுன்னு 5 லட்சம் வரை விட்ருவார் விஜயகாந்த், அது போல ஜூஸ் ஐட்டம், பாதாம் கீர், ப்ரூட் ஜூஸ், காபி, டீலாம் யாருக்கும் கொடுக்க விட மாட்டார், பூஸ்ட், ஹார்லிக்ஸ்தான் ஷூட்டிங் ஸ்பாட்ல.
சாப்பிட்ட எல்லாரிடமும் நல்லா சாப்பிட்டியா எவ்ளோ சாப்பிட்ட எத்தனை சாப்பிட்ட என விஜயகாந்த் விசாரிப்பார் . சாப்பாடு விசயத்தில் ஏனோ தானோவென்று செய்ய மாட்டார் விஜயகாந்த்.
நல்ல சாப்பாடு கொடுக்க வேண்டும். மலிவான விலைக்கு வாங்கி கொடுக்குறதெல்லாம் விஜயகாந்துக்கு பிடிக்காது.