Connect with us

விஜயகாந்த் குறித்த கேள்வி- வடிவேலுவின் சாமர்த்தியமான பதில்

Latest News

விஜயகாந்த் குறித்த கேள்வி- வடிவேலுவின் சாமர்த்தியமான பதில்

நடிகர் விஜயகாந்தின் ஆரம்ப படங்களில் விஜயகாந்துடன் இணைந்து நன்றாக காமெடி செய்து நடித்தவர்தான் வடிவேலு. சில வருடங்களாக விஜயகாந்துக்கும் அவருக்கும் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கடந்த 2011ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் விஜயகாந்துக்கு எதிராக பேசி திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இந்த நிலையில் அவரின் ரெட்கார்டு பிரச்சினைகள் களையப்பட்டு மீண்டும் சுராஜ் இயக்கும் நாய் சேகர் படத்தில் நடிக்க இருக்கிறார்.

வடிவேலுவின் நான்கு வருட இடைவேளை குறித்து தொலைபேசியில் நிருபர் கேட்ட கேள்விகளுக்கும் மற்ற கேள்விகளுக்கும் பொறுமையாக பதிலளித்த வடிவேலு, விஜயகாந்த் பற்றி என்ன நினைக்கிறிங்க என கேட்டதற்கு கடைய சாத்திக்கங்க போதும் என பேட்டியை முடித்துக்கொண்டார்.

பாருங்க:  அரசு ஊழியர்களுக்கு இனிப்பான செய்தி - பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு!

More in Latest News

To Top