திமுக கூட்டணியில் விஜயகாந்த்? – பேச்சுவார்த்தைகள் தீவிரம்

310
Vijayakanth may join in dmk alliance

தேமுதிகவை திமுக – காங்கிரஸ் கூட்டணியில் இணைக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது.

நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில் அதிமுக கூட்டணியில் பாஜக மற்றும் பாமக கட்சிகள் இணைந்துள்ளன. இதில் பாமகவுக்கு 7 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், பாஜகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், திமுக – காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதிமுக – பாஜக கூட்டணியில் தேமுதிக இடம் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. தேமுதிகவிடம் அதிமுக முக்கிய நிர்வாகிகள் பேச்சுவார்த்தையும் நடத்தினர். ஆனால், பாமக ஒதுக்கப்பட்டது போல் தங்களுக்கும் 7 தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்பதில் தேமுதிக உறுதியாக இருக்கிறது. ஆனால், அதிமுக தரப்புக்கு இதில் உடன்பாடு இல்லை. எனவே, அதிமுக-பாஜக கூட்டணியில் தேமுதிக இணைவதில் கேள்விக்குறி எழுந்துள்ளது.

இந்நிலையில், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசு இன்று காலை விஜயகாந்தை நேரில் சந்தித்து பேசினார். அப்போது திமுக கூட்டணிக்கு வரவேண்டும் என விஜயகாந்துக்கு அவர் அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், விஜயகாந்தின் கோரிக்கையை ஸ்டாலின் ஏற்பாரா எனத் தெரியவில்லை. எனவே, தேமுதிக எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என்பதில் இழுபடி நீடிக்கிறது.

பாருங்க:  மாணவி தற்கொலை- ஸ்டாலினின் கடும் கண்டனம்