விஜயகாந்துக்கு கொரோனா சரியாகி விட்டது-தலைமைக்கழகம்

23

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் அமெரிக்காவில் சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டு வந்து கடந்த 2 வருடங்களாக வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார்.

அன்றாடம் அரசியல் நிகழ்வுகளை வீட்டிலிருந்தே கவனித்து வருகிறார். இந்நிலையில் நேற்று அவருக்கு கொரோனா இருப்பதாக சொல்லப்பட்டு சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று தேமுதிக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் விஜயகாந்த்துக்கு லேசான கொரோனா இருந்து சரியாகிவிட்டதாக அறிக்கை வெளியிட்டுள்ளது தற்போது அவர் பூரண உடல்நலத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://twitter.com/polimernews/status/1308977046815748096?s=20

பாருங்க:  வாயால் இழந்த வாக்குவங்கி - மாநில கட்சி அந்தஸ்தை இழக்கும் தேமுதிக