Entertainment
விஜயகாந்த் நடிக்க வந்து இன்றோடு 43 ஆண்டுகள் நிறைவு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் விஜயகாந்த். புரட்சிகலைஞர் விஜயகாந்த் என்று அழைக்கப்பட்ட இவரை அறியாதோர் குறைவு.
தீவிர அரசியலில் ஈடுபட்டு தேமுதிக கட்சியை ஆரம்பித்து இன்று வரை வழி நடத்தி வருபவர்.
கடந்த சில நாட்களாக சினிமாவில் நடிக்கவில்லை, தீவிர அரசியலிலும் ஈடுபடவில்லை காரணம் உடல் நலக்குறைவு.
வைதேகி காத்திருந்தாள் படம்தான் விஜயகாந்தின் வளர்ச்சிக்கு காரணமான முதல் படம் பின்பு கேப்டன் பிரபாகரன், சின்னக்கவுண்டர், கோவில் காளை, புலன் விசாரணை, செந்தூர பாண்டி, வல்லரசு என பல வெற்றி படங்களில் நடித்தார்.
விஜயகாந்த் நடித்த முதல் படம் இனிக்கும் இளமை இந்த படம் வெளியாகி இன்றோடு 43 ஆண்டுகள் ஆகி விட்டது.
16.03.1979ம் ஆண்டு இந்த படம் வெளியானது. இதன் மூலம் விஜயகாந்த் சினிமாவுக்கு வந்து 43 ஆண்டுகள் ஆகிவிட்டது .
