Connect with us

Entertainment

ரெய்டு குறித்து கருத்து தெரிவித்த விஜயபாஸ்கர்

முந்தைய அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் டாக்டர் விஜயபாஸ்கர். இவர் கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்த காலத்திலேயே இவர் வீட்டில் மத்திய அரசால் அளவுக்கதிகமாக சொத்து சேர்த்து இருப்பதாக ரெய்டு நடத்தப்பட்டது.

தற்போது மாநில அரசால் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது.  நேற்று சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள இவரது வீடு, மதுரையில் இவருக்கு சொந்தமான இடங்கள் இவரின் சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டங்களில் ரெய்டு நடத்தப்பட்டது.

விஜயபாஸ்கரின் மகளுக்கு சில நாட்களாக கொரோனா பாதிப்பு இருந்ததால் தனி அறையில் தங்கி சிகிச்சை பெற்றுவந்தார். இது தெரியாமல் அதிகாரிகள் உள்ளே நுழைந்தனர்.

பின்பு மாஸ்க் அணிந்து சோதனை செய்தனர்.

இதனிடையே இது குறித்து கருத்து தெரிவித்த விஜயபாஸ்கர், எனக்கு ஆதரவு தெரிவித்த ஈ.பி.எஸ், ஓபிஎஸ், அதிமுக தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

எனது வீட்டில் இருந்து பணமோ, பொருட்களோ பறிமுதல் செய்யப்படவில்லை, சோதனைகள் தொடரும் நிலையில் முழுமையாக நான் பேசவிரும்பவில்லை என கூறி இருக்கிறார்.

பாருங்க:  வலிமை பட வில்லன் தரும் அப்டேட்

Entertainment

மோகன்லால் நடிக்கும் மரைக்காயர் படத்தின் தமிழ் டிரெய்லர்

மோகன்லால் நடிப்பில் மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பிரமாண்டமாக வெளிவர இருக்கும் படம் மரைக்காயர் அரபிக்கடல் சிங்கம். பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளிவர இருக்கும் இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

பாருங்க:  ஒரே நாளில் 17 புதிய நோயாளிகள் – தமிழகத்தில் அதிகரிக்கும் கொரொனா நோயாளிகளின் எண்ணிக்கை!
Continue Reading

Entertainment

உதயநிதி படத்தில் வடிவேலு

பரியேறும் பெருமாள்,கர்ணன் படங்களுக்கு பிறகு மாரி செல்வராஜ் ஒரு படம் இயக்கி வருகிறார். உதயநிதி நடிக்க இருக்கும் இப்படத்தில் உதயநிதியுடன் வடிவேலுவும் நடிக்கிறாராம்.

இந்த படத்தில் தற்போது வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் தயாரிப்பாளர்களுடன் ஏற்பட்டிருந்த பிரச்சினைகளை நடிகர் வடிவேலு சுமூகமாக தீர்த்துக் கொண்டார்  தற்போது புதிய படங்களில் இவர் நடிக்க ஒப்பந்தமாகி வருவது குறிப்பிடத்தக்கது.

பாருங்க:  முதன் முறையாக வருத்தம் தெரிவித்த ஜெய்பீம் இயக்குனர்
Continue Reading

Entertainment

சமுத்திரக்கனியின் சித்திரை செவ்வானம் டிரெய்லர்

சமுத்திரக்கனி இயக்கத்தில் வந்த வினோதய சித்தம் படம் சமீபத்தில் வந்தது. ஜீ 5 நிறுவனம் அப்படத்தை வெளியிட்டது. இதற்கிடையே மீண்டும் ஒரு புதிய படத்தை அதே சமுத்திரக்கனியின் இயக்கத்தில் இந்த நிறுவனம் வெளியிட இருக்கிறது.

சித்திரை செவ்வானம் என்ற இப்படத்தில் பாசம் மிகுந்த தந்தையாக தன் மகளை காணாமல் தேடி பரிதவிக்கும் தந்தையாக சமுத்திரக்கனி நடித்துள்ளார்.

கிராமத்து பெரியவராக சமுத்திரக்கனி நடித்து இயக்கி இருக்கும் இப்பட டிரெய்லர் வெளியாகியுள்ளது.

பாருங்க:  தமிழகத்தில் முதல் கொரோனா பலி – மதுரையில் சோகம்!
Continue Reading

Trending