Vijaya prabakaran talk about alliance

தேமுதிக கூட்டணியில் இருந்தால் ராஜா.. இல்லையேல் கூஜா – விஜய பிரபாகரன்

வரும் தேர்தலில் தேமுதிக உதவி இன்றி எந்த கட்சியும் ஆட்சி அமைக்காது என தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இளைய மகன் விஜய பிரகாரன் பேசியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். திமுக – காங்கிரஸ் கூட்டணியில் மதிமுக, விடுதலை சிறுத்தை, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இணையும் எனத் தெரிகிறது. அதேபோல், அதிமுக, பாஜக, பாமக ,தேமுதிக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைக்கும் எனத் தெரிகிறது.

இந்நிலையில், இன்று தேமுதிக தொண்டர்கள் முன்பு பேசிய விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன்  “நாம் எந்த கூட்டணியில் இருக்கிறோமோ அந்த கூட்டணியே வெற்றி பெறும். கூட்டணி பேச்சுவார்த்தைக்காக மறைமுகமாக எல்லாரும் நம்முடைய காலில் விழுகிறார்கள். விரைவில் மீடியா முன்பு தேமுதிக இல்லாமல் நாங்கள் இல்லை எனக்கூறுவார்கள். அதுவரை அமைதியாக இருங்கள். நம்மை கிண்டலடித்தவர்களுக்கு பதிலடி கொடுப்போம். நாம் இருந்தால்தான் ராஜா. இல்லையேல் அவர்கள் கூஜா. விரைவில் கேப்டன் வந்து கூட்டணி பற்றி அறிவிப்பார்” எனப் பேசினார்.