தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். மிகவும் பிஸியான முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். அடுத்தடுத்து படங்களை கையில் வைத்துள்ளார் விஜய்.
அது போல் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக இருப்பவர் வெற்றிமாறன் கடந்த வருடங்களில்தான் அவர் தொடர்ந்து வடசென்னை, அசுரன் என இரண்டு படங்களை கொடுத்தார். அதுவும் அசுரன் வேற லெவல் வெற்றிமாறன் படம்.
இந்த படத்துக்கு பிறகு விஜய், வெற்றிமாறன் சந்திப்பு நிகழ்ந்தது. இருவரும் கூட்டணி சேர்வார்களா என ரசிகர்கள் தரப்பில் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இருப்பினும் வெற்றிமாறன் இயக்கத்தால் கவரப்பட்ட விஜய் எதிர்காலத்தில் அவரோடு சேர்ந்து படம் செய்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
வெற்றிமாறனின் நெருங்கிய நண்பரும் அவரின் பல படங்களுக்கு இசையமைத்த ஜிவி பிரகாஷ்குமார் இதை சூசகமாக கூறியுள்ளார். இருவரும் இணைவதற்கான நேரம் பொருந்தாமல் உள்ளது. இருவருடைய படங்களை வைத்துப் பார்த்தால் 2021 அல்லது 2022-ல் இணைய வாய்ப்புள்ளது” என ஜிவி பிரகாஷ் கூறியுள்ளார்.