விஜய் டிவி செய்த சத்தியத்தை நிறைவேற்றவே இல்லை- கஸ்தூரி

விஜய் டிவி செய்த சத்தியத்தை நிறைவேற்றவே இல்லை- கஸ்தூரி

நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 தொடங்கிவிட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியை எதிர்த்து கஸ்தூரி பேசிவருகிறார். எதிர்த்து என்றால் நிகழ்ச்சியை எதிர்த்து அல்ல, விஜய் டிவி தனக்கு கொடுக்க வேண்டிய சம்பள பாக்கியை கொடுக்காததால் அதை எதிர்த்து தொடர் பதிவுகளை இட்டு வருகிறார்.

கடந்த வருடம் நடந்த நிகழ்ச்சிக்கு இதுவரை சம்பளம் வரவில்லை, ஆதரவற்ற குழந்தைகளுக்காக தான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அந்த சம்பளத்தை கொடுக்கலாம் என்றிருந்தேன் என சமீபத்தில் கூறி இருந்தார்.

இந்த நிலையில் அவரது முழு பேட்டி வெளியாகியுள்ளது. அதில் விஜய் டிவி இதுவரை செய்த எந்த சத்தியத்தையும் நிறைவேற்றவில்லை என தெரிவித்துள்ளார்.