விஜய் படத்தில் வில்லனாக நடிக்க டபுள் சேலரி – விஜய் சேதுபதியின் அதிரடி முடிவு

191
vijay sethupathi

விஜய் நடிக்கவுள்ள புதிய படத்தில் விஜய் சேதுபதிக்கு பேசப்பட்டிருக்கும் சம்பளம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இப்படம் வருகிற தீபாவளியன்று வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு பின் விஜய் மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். விஜய்க்கு இது 64வது படமாகும்.

இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் துவங்கவுள்ளது. இப்படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. விஜய் சேதுபதி தொடர்ச்சியாக படங்கள் நடித்து வந்ததால் கால்ஷீட் இல்லை என்றாலும், கதை மிகவும் பிடித்திருந்ததால் இப்படத்தில் நடிக்க அவர் சம்மதம் தெரிவித்துவிட்டதாக செய்திகள் வெளியானது. இப்படத்தில் வில்லனாக நடிக்க அவருக்கு ரூ.10 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியானது.

ஆனால், இப்படத்தில் நடிக்க விஜய் சேதுபதி ரூ.15 கோடி சம்பளம் கேட்டாராம். அவர் தற்போது ரூ.8 கோடி சம்பளம் பெற்று வருகிறார். விஜய் படம், பெரிய பட்ஜெட் என்பதாலும், வில்லன் என்பதாலும் விஜய் சேதுபதி கேட்ட சம்பளத்தை கொடுக்க தயாரிப்பு நிறுவனமும் ஒத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னரே அவர் இப்படத்தில் நடிக்கிறார் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

பாருங்க:  நவம்பர் முதல் மெரினா கடற்கரை திறக்க வாய்ப்பு