Published
2 years agoon
தமிழில் கதாநாயகனாக நடித்தாலும், விக்ரம் வேதா, பேட்ட, தற்போது வெளியாகியுள்ள மாஸ்டர் படங்களில் வில்லனாக நடித்தவர் விஜய் சேதுபதி. அதிலும் மாஸ்டர் படத்தில் மிக கொடூர வில்லனாக இவர் நடித்திருந்தார்.
தமிழ் தவிர தெலுங்கிலும் விஜய் சேதுபதி கலக்கி வருகிறார். சமீபத்தில் கூட தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவி அவரை மனம் திறந்து பாராட்டினார்.
விஜய் சேதுபதி தற்போது உபென்னா என்ற படத்தில் நடித்துள்ளார்.
வைஷ்ணவ் தேஜ், அத்வைதா கதாநாயகன் கதாநாயகியாக இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் வில்லத்தனத்தில் மிரட்டியுள்ளார் விஜய் சேதுபதி.