Connect with us

Entertainment

விஜய் சேதுபதியின் தவறான பட முடிவுகள் குறித்து அவருக்கு கடிதம் எழுதிய நிருபர்

Published

on

விஜய் சேதுபதியின் நண்பர் என ஒரு சினிமா நிருபர் அவருக்கு ஒரு நீண்ட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.மீரான் என்ற அந்த நிருபரின் கடிதம் இதோ. இதை அவர் முகநூலில் வெளியிட்டுள்ளார்.

அன்புள்ள தம்பி விஜய் சேதுபதிக்கு…
உங்கள் மீது அக்கறையுள்ள அண்ணன் எழுதிக் கொள்வது, சமீபகாலமாக தங்கள் நடிப்பில் ஏற்பட்டுள்ள மாறுதல்கள் விஜய்சேதுபதி என்கிற மகத்தான கலைஞனை மாய்த்துவிடுமோ என்கிற அச்சத்தில்தான் இந்த கடிதம்.
சினிமா மீது கொண்ட தீராத தாகத்தால் கூத்துப்பட்டறையில் கணக்கராக வேலை செய்து கொண்டே நடிப்பு கற்று, நீண்ட நெடிய வாய்ப்பு தேடலில் அட்மாஷ்பியர் ஆர்ட்டிஸ்டாகி, பின்னர் சின்ன சின்ன வேடங்களில் நடித்து குறும்பட நடிகராகி பின்பு தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் முழுமையான நடிகரானீர்கள்.
அதுவரையிலான தங்களின் உழைப்பும், பட்ட அவமானங்களும் ஒரு புத்தகமாக எழுதும் அளவிற்கு கனமானவை என்பதை நான் அறிவேன்.
உங்களுக்கு நினைவிருக்குமா என்று தெரியாது. நுங்கம்பாக்கம் 4 பிரேம் தியேட்டரில் தென்மேற்கு பருவக்காற்று பத்திரிகையாளர் காட்சி முடிந்ததும் உங்கள் பைக்கிலேயே என்னை அருகில் உள்ள டீ கடைக்கு அழைத்து சென்று டீ வாங்கிக் கொடுத்து “படம் எப்டீண்ணே இருக்கு. ஜெயிச்சிரும்லாண்ணே…” என்று அன்று நீங்கள் சொன்னபோது உங்கள் கண்களில் இருந்த ஆர்வத்தையும், சினிமா நேசத்தையும் இப்போதும் காண்கிறேன்.
பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும் என அடுத்தடுத்து வெளியான படங்களில் அதுவரை நடிப்பு பற்றி இருந்த அத்தனை கருத்தாக்கங்களையும் உடைத்தெறிந்து புதிய தடத்தை பதித்தீர்கள்,
ஆரஞ்சு மிட்டாய், சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ், புறம்போக்கு என்கிற பொதுவுடமை, விக்ரம் வேதா உள்ளிட்ட பல படங்களில் நடிப்பு அசுரனாக நிமிர்ந்து நின்றீர்கள். 96ல் காதலாகி கசிந்துருகினீர்கள்.
நீங்கள் நட்புக்கு மரியாதை செய்கிறவர் என்பதை உலகம் அறியும். அதனால்தான் நஷ்டமாகும் என்று தெரிந்தும் லாபம் படத்தை தயாரித்தீர்கள். நட்புக்காக அளவுக்கு அதிகமான படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்துக் கொடுத்தீர்கள்.
ஆனால் சமீபகாலமாக உங்கள் நடிப்பில் ஏன் இத்தனை தடுமாற்றம், கதை தேர்வில் ஏன் இத்தனை அக்கறையின்மை. லாபம் ஒரு பிரச்சார நெடி நிறைந்த படம்தான். ஆனாலும் அதில் ஏன் இத்தனை மேம்போக்காக நடித்தீர்கள். தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுப்பது மாதிரியான முகபாவத்திலேயே ஏன் நடித்தீர்கள்.
நாம் எதுசெய்தாலும் மக்கள் ஏற்பார்கள் என்கிற தங்களின் திடீர் மமதையையே துக்ளக் தர்பார் படத்தில் நீங்கள் வெளிப்படுத்தினீர்கள். கண்ணை சிமிட்டி விட்டால் இன்னொரு குணாதிசயம் கொண்டவனாக மாறிவிடுகிற துளியும் லாஜிகில்லாத ஒரு கதையை எப்படி தேர்வு செய்தீர்கள்.
அனபெல் சேதுபதி படத்தின் கதை தெரிந்து நடித்தீர்களா? அல்லது டாப்சியுடன் நடிக்க வேண்டும் என்கிற ஆசையில் நடித்தீர்களா? என்றே புரியவில்லை. நடிக்கும்போதே இந்த காட்சிகள் மக்களால் கேலியாக பார்க்கப்படும் என்பது உங்களுக்கு எப்படி தெரியாமல் போனது.
அமீர்கான் படத்தையே மறுக்கும் அளவுக்கு தெளிந்த சிந்தனையும், செயல்பாடும் கொண்ட உங்களால் எப்படி உருப்படாத கதைகளை தேர்வு செய்து, அதில் கொஞ்சமும் மெனக்கெடாமல் நடிக்க முடிகிறது.
இனி வரப்போகும் படங்கள் எப்படி என்று தெரியாது. ஆனால் இப்படியே தொடர்ந்தால், விஜய்சேதுபதியை வெறும்சேதுபதியாக்கிவிடும் சினிமா.
நல்ல கலைஞன் மீது கொண்ட அக்கறையாலும், ஒரு அண்ணன் என்கிற அன்பாலுமே இந்த கடிதம்.
அன்புடன்
அண்ணன்.

பாருங்க:  பள்ளி மாணவிகளையும் விட்டு வைக்காத காம கொடூரன் மோகன்ராஜ் - பகீர் தகவல்

 

 

mutton
Latest News24 mins ago

மட்டன் கறிக்குள் புழு…புரட்டி எடுத்த பெற்றோர்…அசைவ பிரியர்கள் அதிர்ச்சி?…

jayamravi bayilvan
Latest News1 hour ago

மாமியர் கஸ்டடியில் ஜெயம் ரவி!…விவகாரத்து முடிவு?…பத்த வச்சி விட்டுட்டீங்களே பயில்வான்….

vijay yuvan
Latest News18 hours ago

பிறந்த தினத்தில் அழ வைத்த விஜய்?…எதிர்பார்க்கவே இல்லையே இத!……

soori
Latest News18 hours ago

இந்தாங்க இந்த கிஃப்ட புடிங்க…இப்போ இது தான் ஃபேஸன்…சூரிக்கு அடித்த பம்பர்?…

chandrababu naidu
National News19 hours ago

பழிவாங்கும் செயல்களில் தீவிரம் காட்டி வருகிறார் சந்திர பாபு நாயுடு…பகீர் குற்றச்சாட்டு வைத்த மாஜி…

jewel
Latest News20 hours ago

இறங்கு முகத்தில் தங்கத்தின் விலை!…அப்புறம் என்ன ஆர்டர் போட்றவேண்டியது தானே?…

road
Latest News21 hours ago

சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள்…அமைச்சர் அதிரடி எச்சரிக்கை!…

rain
Latest News22 hours ago

உஷார் மாமே!…ஆரஞ்சு அலர்ட் சொல்லியாச்சு!…சரி எங்கேல்லாமாம்?

vijay
Latest News23 hours ago

விஜய் அண்ணா அவ்ளோ சொல்லியும் கேட்டீங்களா?…சண்டைன்னா சட்ட கிழியத்தான் செய்யும் அசால்ட் பண்ணிய ரசிகர்!…

ajith
Latest News1 day ago

விஜய் பைக்ல வந்தா நான் கார்ல வருவேன்…அல்ட்ரா மார்டன் லூக்கில் அஜீத்!…

vijay vijayakanth
Latest News5 days ago

ஐம்பதுல அடிச்சி தூக்கிய ஹீரோஸ்!…அப்போ இவங்கெல்லாம் அட்டர் ப்ளாப்பா?…

AK
Latest News6 days ago

வேற லெவல் பண்ண போகுதா படம்?…வேஷ்டி சட்டையில் அஜீத்!…ரசிகர் கொடுத்த அன்பு பரிசு…

kalaranjini urvashi
Latest News6 days ago

யூனிஃபார்மோடு ஷூட்டிங் போன ஊர்வசி!…பாதையை மாற்றி விட்ட சகோதரி…தாயாக மாறிய சோகம்?…

prabhu aiswarya
Tamil Flash News5 days ago

சின்ன வீடா வரட்டுமா…ஓப்பனா கேட்ட ஐஸ்வர்யா?…அப்படி ஒரு லவ்வாம் பிரபு மேல!…

arvind swamy
Latest News5 days ago

ஐம்பத்தினாலு வயசு ஆகிடுச்சா அரவிந்த்சாமிக்கு?…மறக்க முடியுமா கலெக்டர் சார் நீங்க ரொம்ப நல்லவங்க!…

vijaysethupathi rajini kamal
Latest News7 days ago

ரஜினி கமலை மிஞ்சிய விஜய்சேதுபதி?…என்ன பிரயோஜனம்…அஞ்சு வருஷம் ஆளையே காணோமே…

raghuvaran
Latest News6 days ago

இதை மட்டும் செய்யாம விட்டுட்டாரு!…ரகுவரன் செய்த தவறை சொல்லி வருத்தப்பட்ட சத்யராஜ்…

vijay
Latest News2 days ago

செலிபிரேஷன் கிடையாது…ஆனா சாங் உண்டு…ரசிகர்களுக்கு ஆறுதல் கொடுத்த விஜய்!…

vijaysethupathi
Latest News6 days ago

அஜீத் பெயரை பறிக்க துடிக்கும் சூர்யா?… சம்மதம் சொல்லி பப்ளிசிட்டி கொடுத்த விஜய்!…

veeram
Latest News3 days ago

தம்பி மயில்வாகனம் கதவ இழுத்து மூடு…வீரம் பட அஜீத் பாணியில் சம்பவம் செய்த ஹீரோவின் அப்பா…