மீண்டும் வில்லனாகும் விஜய் சேதுபதி

50

தான் நடிக்கும் படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. ஆரம்பத்தில் இருந்தே வித்தியாசமான கதைகளில் நடித்து அனைவரின் கவனம் ஈர்த்தவர் இவர்.

கதாநாயகன் என்றில்லை கதாநாயகனாக நடித்துக்கொண்டிருக்கும்போதே விக்ரம் வேதா, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார் இவர்.

சமீபத்தில் தெலுங்கில் உபாசனா படத்தில் இவர் வில்லனாக நடித்திருந்தார். படமும் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனது.

இந்நிலையில் மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் இவர் வில்லனாக நடிக்க இருக்கிறாராம்.

தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கும் புதிய படத்தில் வில்லனாக நடிக்க அவரிடம் பேசி வருகிறார்கள்.
இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்குகிறார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்ற கேஜிஎப் படத்தை இயக்கியவர்.
பாருங்க:  பா ரஞ்சித் தயாரிப்பில் புதிய படம்
Previous articleமோசடி வழக்கில் நடிகர் ஆர்.கே சுரேஷ் மீது புகார்
Next articleஹன்சிகாவின் மஹா டீசர் தேதி அறிவிப்பு