நடிகர் விஜய் அடுத்து நடிக்கவுள்ள திரைப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளார் என்கிற செய்தி வெளியானது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இப்படம் வருகிற தீபாவளியன்று வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு பின் விஜய் மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். விஜய்க்கு இது 64வது படமாகும்.
இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் துவங்கவுள்ளது. இப்படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. விஜய் சேதுபதி தொடர்ச்சியாக படங்கள் நடித்து வந்ததால் கால்ஷீட் இல்லை என்றாலும், கதை மிகவும் பிடித்திருந்ததால் இப்படத்தில் நடிக்க அவர் சம்மதம் தெரிவித்துவிட்டதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில், இப்படத்தில் வில்லனாக நடிக்க அவருக்கு ரூ.10 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது.