cinema news
விஜய் சேதுபதியை கலாய்த்து வெளியாகும் மீம்ஸ்கள்
தமிழ் சினிமாவில் ஒரு நடிகரை உயர்த்த வேண்டும் என்றால் அவர்கள் செய்யாததை கூட செய்ததாக சொல்லி மிகப்பெரிய அளவில் உயர்த்தி விடுவார்கள் மக்கள். கொஞ்சம் சறுக்கி விட்டால் அவரை காலி செய்து விடுவார்கள் அப்படித்தான் கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக விஜய் சேதுபதியின் படங்கள் வெற்றியாகி அவர் பெரிய நடிகராக மக்கள் மனதில் பதிந்தார்.
சமீப நாட்களாக அவரின் படங்கள் அனைத்தும் தொடர் தோல்வியடைந்து வருகின்றன. இதனால் அவர் சமூக வலைதளங்களில் மீம்ஸ் நாயகர்களின் செல்லப்பிள்ளையாகி வருகிறார்.
எல்லா படத்திலும் விஜய் சேதுபதி நடிப்பதும் சும்மா கெஸ்ட் ரோல் வந்து செல்வதும், எல்லா படத்து ஆடியோ பங்ஷனில் கலந்து கொள்வதும், படங்களின் டீசர் அனைத்தையும் வெளியிடுவதும் விஜய் சேதுபதியின் மீது உள்ள விமர்சன மீம்ஸ்களாகும்.
இன்று விஜய் சேதுபதி வெளியிட்டுள்ள ஒரு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் அவரை சில ரசிகர்கள் அவரை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.
— Prabu (@Prabaka23722542) September 19, 2021