cinema news
விஜய் சேதுபதி நாயகி திடீர் நீக்கம் காரணம் என்னவா இருக்கும்???
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிக்கும் காதல் திரைப்படம் தான் “காத்துவாக்குல ரெண்டு காதல்”. இப்படத்தை அனிருத் இசையமைக்க லலித் குமார் தாயாரிக்கவுள்ளார்.
“நானும் ரவுடி தான்” படத்திற்க்கு பின்பு விக்னேஷ் சிவன் விஜய்சேதுபதி மற்றும் நயன்தாரா கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படம் தான் “காத்துவாக்குல ரெண்டு காதல்”. இப்படத்தின் முதற்கட்ட பணிகள் அடுத்த மாதம் தொடங்கும் என்று எதிர்பார்த்த நிலையில் இப்படத்தின் மற்றொரு நாயகியான சமந்தா திடீரென படத்தில் இருந்து வெளியேற உள்ளதாகவும் அதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று யோசிக்க பிரபல ஆங்கில நாளிதழில் பரபரப்பான செய்தி ஒன்றை வெளியிட்டுஉள்ளது.
அவ்வப்போது நடிகை சமந்தா கர்ப்பம் என்ற செய்திகள் வருவதும் பின்பு அவர் அதனை மறுப்பதும் வாடிக்கையாகஇருந்தாலும் கூட இம்முறை வந்த செய்தியாவது உண்மையாக இருக்க வேண்டும் என்று சாம் (சமந்தா) ரசிகர்கள் கவலை மிகுந்த சந்தோசத்துடன் அவரின் பதில் என்னவாக இருக்கும் என்றும் எதிர்நோக்கியுள்ளார்கள்.
சீக்கரம் நல்ல விஷயம் சொல்லுங்க சமந்தா நீங்க படத்தில் நடித்தாலும் சரி அம்மா ஆனாலும் சரி எங்களுக்கு ஹாப்பி தான் என்கிறார்கள் ரசிகர்கள்.