ஜோதிகா கோவில்களை பராமரிக்கும் அளவுக்கு மருத்துவமனைகளையும் பராமரிக்க வேண்டும் எனக் கூறியது சர்ச்சைகளைக் கிளப்பியதை அடுத்து அவருக்கு விஜய் சேதுபதி ஆதரவு அளித்ததாக ஒரு போலியான பதிவு பகிரப்பட்டுள்ளது.
கடந்த மாதம் நடந்த சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை ஜோதிகா மக்கள் கோவில்களைக் காட்டிலும் பள்ளி கல்லூரிகளுக்கு அதிக கவனம் செலுத்தாதது குறித்து பேசியிருந்தார். அவரது பேச்சில் ‘நான் படப்ப்டிப்புக்காக தஞ்சாவூர் சென்றிருந்தபோது பிரகதீஸ்வரர் கோவிலுக்கு சென்றேன். அந்த கோவில் பெரும் பொருட் செலவில் பராமரிக்கப்படுகிறது. ஆனால் அருகில் இருந்த மருத்துவமனை பராமரிப்பின்றி மோசமாக இருப்பது வருத்தமளிக்கிறது. மக்கள் கோவில்களுக்கு ஏராளமான செலவுகளை செய்வதை காட்டிலும் பள்ளிகள், மருத்துவமனைகளுக்கு செலவு செய்ய வேண்டும்’ என கூறியுள்ளார்.
இந்நிலையில் ஜோதிகாவின் கருத்துக்குப் பதிலளிக்கும் விதமாக பேசியுள்ள நடிகரும் பாஜக வை சேர்ந்தவர்கள் பலர் அவர் கோவிலுக்கு செலவு செய்யாமல் மருத்துவமனைக்கு செலவு செய்ய சொன்னதாக நினைத்து அவருக்குக் கண்டனங்களை பதிவு செய்தனர். இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதியின் சமூகவலைதளப் பக்கத்தில் ‘ஜோதிகா அவர்களின் துணிவான பேச்சுக்கு வாழ்த்துக்கள். அவர்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் சக நடிகனாக முதல் ஆளாக இருப்பேன். கோவில்கள் மருத்துவமனையாக மாறும் காலம் நெருங்கிவிட்டது’ என அவர் பெயரில் ஒரு சமூகவலைதளப் பதிவு வெளியானது.
ஆனால் இந்த பதிவு போலி என்று விஜய் சேதுபதி தனது சமூகவலைதளப் பக்கத்தில் Fake என்று அந்த பதிவைப் பற்றி கூறியுள்ளார்.