cinema news
விஜய் சேதுபதிக்கு எதிராக சாதிய வழக்கு
கடந்த மாதம் விஜய் சேதுபதி பெங்களூரு ஏர்போர்ட் சென்றபோது ஒருவர் ஓடிவந்து பின்புறம் லேசாக உதைத்து விட்டு சென்றார். அவர் யாரென்று விசாரித்து பார்க்கையில் அவர் பெயர் மகா காந்தி என்பது தெரிய வந்தது அவர்தான் தற்போது விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கை தொடுத்துள்ளார்.
கடந்த நவம்பர் 3ம் தேதி பெங்களூருவில் விஜய்சேதுபதியை பாராட்டி வாழ்த்து தெரிவித்த போது ஏற்க மறுத்து இழிவுபடுத்தி தவறாக பேசியதாகவும், இவர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
அத்துடன் அவர் தனது மனுவில், என் சாதியை சிறுமைப்படுத்தி விஜய்சேதுபதி பேசினார். எனவே நடிகர் விஜய் சேதுபதி அவரது மேலாளர் ஜான்சன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு சென்னை, சைதாப்பேட்டை 9வது பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாக கூறப்படுகின்றது.