தமிழக சினிமா ரசிகர்களால் மக்கள் செல்வன் என அழைக்கப்படுபவர் விஜய் சேதுபதி. சமீபத்தில் வந்த மாஸ்டர் படத்தில் பவானி என்ற வில்லன் ரோலில் நடித்து கலக்கியுள்ளார்.
பல்வேறு படங்களில் நடித்துள்ள விஜய் சேதுபதி ஒரு அசைக்க முடியாத சக்தியாக விளங்குகிறார்.
இவரின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய விஜய் சேதுபதி அதை கத்தியால் வெட்டாமல் பெரிய அரிவாள் வைத்து வெட்டி கொண்டாடியுள்ளார்.
ஏற்கனவே இது போல அரிவாளால் கேக் வெட்டிய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விஜய் சேதுபதியும் இது போல கேக் வெட்டியதால் சர்ச்சை எழுந்துள்ளது