Entertainment
விஜய் சேதுபதி படத்தில் வில்லன் ஆகும் கெளதம் மேனன்
கெளதம் மேனன் சமீபத்தில் வந்த ருத்ர தாண்டவம் படத்தில் முழு வில்லனாக நடித்தார். ஆரம்ப காலங்களில் வில்லன்கள் சிலருக்கு பின்னணி குரல் கொடுத்து வந்த கெளதம் மேனன் தற்போது முழு நேர வில்லனாக கலக்கி வருகிறார்.
இந்நிலையில் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் மைக்கேல் படத்தில் சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி இணைந்து நடித்து வருகின்றனர் இந்த படத்தில் அதிரடி வில்லனாக கெளதம் மேனன் நடிக்க இருக்கிறார்.
தற்போது சிம்புவை வைத்து வெந்து தணிந்தது காடு படத்தை இயக்கி வரும் கெளதம் மேனன் அந்த படப்பிடிப்பை முடிக்க இருக்கிறார். விரைவில் இப்படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்கிறார்.
