cinema news
கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் விஜய் மரியாதை செலுத்தினார்
கன்னட சூப்பர் ஸ்டாராக திகழ்ந்த மறைந்த ராஜ்குமாரின் இளைய புதல்வர் புனித் ராஜ்குமார்.இவர் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ம் தேதி திடீர் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
அந்த நேரத்தில் சிவகார்த்திகேயன் உட்பட பல நடிகர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில் அந்த நேரத்தில் அங்கு செல்ல முடியாத நடிகர் விஜய் இன்று நேரில் சென்று புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு அவர்களது வீட்டுக்கும் சென்றார்.