Entertainment
விஜய்தான் நம்பர் 1- சொல்கிறார் ப்ளூ சட்டை மாறன்
ப்ளூ சட்டை மாறன் வழக்கமாக அஜீத் படங்களை கடுமையாக விமர்சிப்பவர். விவேகம் படத்தை விமர்சித்து அஜீத் ரசிகர்களின் நிரந்தர கோபத்துக்கு ஆளானார்.
பின்பு வலிமை படத்தை கடுமையாக விமர்சித்தார். இந்த நிலையில் பீஸ்ட் படத்தை தலையில் தூக்கி வைத்து ஒரு பதிவை இவர் மேற்கொண்டுள்ளார்.
ரிலீசுக்கு ஒரு வாரம் முன்பே ஆன்லைன் புக்கிங்கில் ஹவுஸ்ஃபுல் ஆகி வருகிறது பீஸ்ட். அண்ணாத்த, வலிமை, எதற்கும் துணிந்தவன் படங்கள் ரிலீஸுக்கு முந்தைய நாளில் கூட இந்தளவிற்கு நிரம்பவில்லை. யூ ட்யூப் வியூஸ், அட்வான்ஸ் புக்கிங்.. இரண்டிலும் நம்பர் 1 இடத்தில் விஜய் இருக்கிறார் என ப்ளூ சட்டை மாறன் கூறி இருக்கிறார்.
