விஜய் மக்கள் இயக்க முன்னாள் தலைவர் மீது தொடர் புகார் அளித்து வரும் விஜய் ரசிகர்கள்

14

10 வருடங்கள் முன்பு விஜய் ரசிகர் மன்ற தலைவராக இருந்தவர் ஜெயசீலன். சென்னை திருவொற்றியூரை சேர்ந்த இவர் மீது தொடர் புகார்கள் கூறப்பட்டதால் 2011ல் விஜய் மன்றத்தை விட்டு விலகி திமுகவில் இணைந்தார்.

பின்பு விஷால் ரசிகர்மன்ற தலைவரான இவர் விஜயை போலவே விஷாலையும் கொண்டு வருவேன் என கூறி இருக்கிறார்.

தற்போது விஜய்யின் பெயரில் கட்சி தொடங்க முயன்று விஜய்யின் கோபத்திற்கு உள்ளாகி இருக்கும் அவரது தந்தை எஸ்.ஏசியின் ஆதரவாளராக ஜெயசீலன் உள்ளார்.

அண்மையில் விஜய் மக்கள் இயக்க மாநில செயலாளர் புஸ்ஸி ஆனந்த் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.

இதற்கு விஜய் ரசிகர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். கடலூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் ஜெயசீலனுக்கு எதிராக புகார் கொடுக்கும் வேளைகளில் விஜய் ரசிகர்கள் இறங்கியுள்ளனர்.

பாருங்க:  மாஸ்டர் படம் வெற்றியடைந்துள்ளதா- திரும்பவும் தியேட்டர் களை கட்டுகிறதா