விஜய் ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்

விஜய் ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்

பொதுவாக அஜீத், ரசிகர்கள் தங்கள் தலைவர்களின் படங்கள் பூஜை போட்டதில் இருந்து, பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர், ட்ரெய்லர், ஆடியோ, வெளியீடு, படம் வந்த பிறகு அந்த படம் பற்றிய விமர்சனங்கள் என கொண்டாடி தீர்த்து விடுவார்கள்.

படம் வந்து ஒரு வருடம் ஆனாலும் இப்போதெல்லாம் ஒரு படி மேலே போய் முதல் ஆண்டு விழா எல்லாம் கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள்.

கடந்த ஆண்டு வெளியான பிகில் படத்துக்கும் அது போல ரசிகர்கள் செய்து வருகிறார்கள். கடந்த 2019ல் தீபாவளி ரிலீஸாக பிகில் திரைப்படம் வந்தது. படம் வந்து ஒரு வருடம் ஆக போகும் நிலையில் அப்படத்தின் ஹேஸ்டேக்கை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். அப்படத்தின் ஆடியோ வெளியாகி ஒரு வருடம் ஆன நிலையில் அதையும் ட்ரெண்டாக்கி வருகின்றனர் ரசிகர்கள்.