விஜய் படத்தை இயக்குகிறாரா ஹெச்.வினோத்

26

விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்க இருக்கிறார். வரும் ஏப்ரல் மாதம் படத்தின் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது படம் தீபாவளிக்கு வர இருக்கிறது.

அதே போல் இயக்குனர் ஹெச் வினோத் அஜீத்தை வைத்து வலிமை படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படம் முடியவும் சில நாட்கள் ஆகும் என தெரிகிறது.ஏற்கனவே தீரன் அதிகாரம் படம் முடிந்த உடனே ஹெச். வினோத்துடன் விஜய் இணைய இருப்பதாக இருவருக்கும் நடந்த சந்திப்பை வைத்து சொல்லப்பட்டது. இந்த நிலையில் இருவரையும் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது.

இந்த இணைவு இன்னும் முடிவாகாத நிலையில் அஜீத்தின் அடுத்த பட இயக்குனர் என்பதை அஜீத் இன்னும் முடிவு செய்யவில்லை ஒரு வேளை அஜீத் தனக்கு பிடித்திருந்தால் ஒரே இயக்குனருடனே தொடர்ந்து பணிபுரிவார்.ஏற்கனவே சிறுத்தை சிவாவுடன் அப்படித்தான் பணிபுரிந்தார்.

அதுபோலவே ஹெச். வினோத்துடனே திரும்பவும் பணிபுரிய விரும்பினால் இந்த கூட்டணியில் மாறுதல் ஏற்படும் என தெரிகிறது.

பாருங்க:  மாஸ்டர் படத்தின் டிரைலர் எப்போது? பிரபல நடிகர் பதில்!